உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, December 26, 2010

என்னடா கொடுமை இது


உதட்டை நனைக்க
வந்த வார்த்தைகளும்
உலர்ந்து போகும் கொடுமை
உன் நிழலில் நனையும்
போதுதான் நிகழ்கிறது

செல்லம்


பல தவறுகள் வலியையே
பரிசளித்தன
ஆனாலும் என் நன்றிகள்
நம் சண்டைகளுக்கே
வலிகளில் தானடா நன் உன்னில்
அதிகம் கரைகின்றேன்

Thursday, December 2, 2010

என்ன தான் செய்வேன்


உன்னை என்வசமாக்கிக்
கொள்ளும் முயற்சியில்
அறியாமலே இன்று நான் - என்
கைவசம் இல்லாது போனேன்

Monday, November 22, 2010

ஆம்நாம் வித்தியசமானவர்கள் தான்
இரவின் துணையில் கைக்கோர்த்து
நடப்பதில்லை
நொடிக்கொரு தடவை ஸ்பரிசங்களால்
செத்துப் பிழைப்பதில்லை
கடலோர மண்ணில் இருவர் தடமும் ஒரு சேர
நடப்பதில்லை
உனக்கு முன் நானும் எனக்கு முன் நீயுமாக
ஊட்டிக்கொண்டு சாப்பிடுவதுமில்லை

உன்னை சீண்டும் கரங்கள் இன்று
கனவில் மட்டுமே எனக்கு சொந்தம்
கண்டங்களால் மலைகளால் கடலால்
நாம் பிரிக்கப்பட்டிருக்கலாம்
எனக்குள் உன் காதலும் உனக்குள் என் காதலும்
இந்தப் பிரிவை ஏற்றுக்கொள்வதாயில்லை
நினைவுகளாலும் தூய்மையான அன்பாலும்
வாழ்ந்துகொண்டிருக்கும் நம் காதலால்
நாம் வித்தியாசமானவர்கள் தான்

Sunday, November 14, 2010

மழைக்காலம்சீண்டிச் செல்லும் உன் பார்வை
மின்னல் கீற்றுக்களாய் - உள்ளுக்குள்
எதிர்பாராமல் இடியென தாக்குதல் நடத்துவதாய்
உன் செல்லக் குறும்புகள்
நான் நனையும் மழைத்துளிகளாய் இடைவெளி இன்றி எனை
ஆள வேண்டுமடா உன் முத்த மழையும்
வெளியில் தான் தேவை காலநிலை மாற்றம்
உள்ளுக்குள் நீ என்றுமே வேண்டுமெனக்கு
மழைக்காலமாய் ............

Thursday, November 4, 2010

தற்கொலை


தினம் தோறும் உனக்குள் தவறி விழுந்து
தற்கொலை செய்வதே வேலையாய்
போய்விட்டது இந்த பாவிக்கு
மீண்டு வர எண்ணமில்லை
பாதி உயிராய் அலைந்து திரியவும் முடிவதில்லை
கொன்று சென்று விடு இல்லையேல்
இவளை முழுமையாய் கொண்டு சென்று விடு

மறக்கக் கற்றுக்கொண்டேன்


மறக்கக் கற்றுக்கொண்டேன் - உன்னையல்ல
உன் பேச்சால் என் மொழியை
உன் அசைவால் என் நிலையை
உன் அன்பால் இவ் உலகை
தினம் தோறும் உன்னால் என்னை
மறக்கக் கற்றுக்கொண்டேன்

ம்ம்ம் .......


என் பொழுதுகள் உன்னோடுதான்
என் இம்சைகளும் உன்னில்தான்
செல்லக் குறும்புகள் நமக்குள்ளேதான்
காதோரச் சினுங்கல்களும் நமக்குள்ளே தான்
காரணம் நம் உலகில் -நாம்
நமக்கே நமக்காகத்தான்

Tuesday, October 19, 2010

வஞ்சனை


நாள் தோறும் உன்னை வலம் வர
என் விழிகளுக்கு மட்டுமே முடிகிறது
அந்த முயற்சியில் என்றுமே
என் கால்களுக்கு தோல்வி தான்
நீ அருகிலிருக்கும் வரை உன்னை
காண வஞ்சித்த அதே கண்கள்
இன்று வள்ளலாய் மாறியது
பார்வையால் அல்ல கண்ணீரால்
சில நாட்களில் அது கூட இல்லாது
ஏழையாய் மாறிவிடும் ....
சாலை ஓரம் நான் காணாது மறைந்து போன
உன் நிழலுக்காய்
இன்றும் அங்கேயே தேங்கி நிற்கும்
இந்த உயிரை மன்னிப்பாயா ......

குழப்பம்


அருகில் வந்த இறப்பும் வழியின்றி
நிற்பது கண்டேன்
இன்னுமா புரியவில்லை உனக்கு
என்னுயிர் எங்கேயடா இங்கிருக்கிறது
அது தன எப்போதோ அங்கு
பறந்து வந்துவிட்டதே

Tuesday, October 12, 2010

காதல்


அது இது என அக்றிணையிலேயே பேசிப்பழகிவிட்டோம்
காதலைப்பற்றி
ஏன் இதுவரை உணரவில்லை இதயங்களின் இணைப்பால்
உருவாகும் காதலுக்கும் உயிர் இருக்கின்றது
என்பதை ....
அனைத்தறிவு ஜீவன்களுக்கும் சொந்தமான
காதலுக்கு எத்தனை அறிவிருக்கின்றதோ யாரறிவார்
காதல்
என்னைப்பொறுத்தவரை என்றும்
உயர்தினைக்குரியது தான் ....

வேகத்தடை


நீ அருகில் இல்லா காலங்களில்
இதயத்துள் இருக்கும் உன் நினைவுகளின் துடிப்பால்
என் அத்தனை பயணங்களிலும் நொடிக்கொரு
வேகத்தடை ,
விரைவில் வந்துவிடு துடிப்பின் வேகம்
நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது ...

தெரிந்துவிட்டது


பூமிக்கு வர நினைத்த மழைத்துளிகள்
நீ வரும் வரை நான் அவற்றை எண்ணிக்கொண்டிருப்பதை அறிந்து
வானத்து விண்மீன்களாய் அங்கேயே தங்கிவிட்டன
உன்னை மீண்டும் காணப் போகும் நொடிகள்
வெகு தொலைவில் இருப்பது அவற்றிற்கும்
தெரிந்துவிட்டது போலும் ...

Friday, October 1, 2010

மழை துளிகள்


பேரூந்து பயணத்தில் பல மணித்துளிகள் கரைவது கூட தெரியாமல்

சில மழைத்துளிகளில் கரைந்துவிட்டது என் ஆழ்மனம்

யன்னல் ஓரக் கம்பிகளில் மோதிக்கொண்டாலும்

வரிசை மாறாது பயணிக்கும் துளிகளுக்கு

யார் கற்று தந்தது ஒழுக்கத்தை ...மூடிய யன்னலில் படிந்த பனியை

மெதுவாக துடைத்து சிறு ஓரப் பார்வையால்

ரசிக்க என்ன இல்லை நம்மைச் சுற்றி ....சின்னஞ் சிட்டுக்கள் மழை அங்கியையும் மீறி

எப்படியாவது நனைந்துவிட வேண்டும் என்று துள்ளித் திரிய

தம்மை பாதுகாத்துகொள்ளும் முயற்சியில் தோல்வி கண்ட

பெரியோர் எப்படியாவது சென்றுவிடவேண்டும் எனும்

எண்ணத்தில் தொடர்கின்றனர்...இன்று தானோ விளையாட்டு போட்டி என எண்ணுமளவு

வெளியே பல சாகசங்கள் இரசனையின் உச்சியில்

தேங்கி நிற்கும் நீரை கடக்க சிலர் தூரம் பாய்தலில்

இன்னும் சிலர் உயரம் பாய்தலில்

எஞ்சிய பலர் நனையாத இடம் தேடி மரதன் ஓட்டத்தில்

தமக்குள்ளேயே வெற்றி கண்டுகொள்கின்றனர்...வெய்யிலில் நிழல் தரும் மரங்கள் இன்று தாமும்

மழை கண்ட சந்தோஷத்தில் ஆட்டம் காண்கின்றன

அகங்காரமாய் நிமிர்ந்து நின்ற புற்கள்

மழைத்துளி காரணமாக தலைக்கணம் கூடிப்போய்

தரைநோக்கி கவிழ்கின்றன ....ரசனைக்கு எல்லை இல்லை

பயணத்தின் முடிவு வரை - ஆகயத்திலிருந்தான

ரகசியத் தூதர்களின் வரவிற்கும் முடிவில்லை ...

Tuesday, September 21, 2010

குறுஞ்செய்தி


தொலைபேசியில் உன் குறுஞ்செய்தி அனுப்பி
எனக்குள் களிப்பை விட
உன் குறு குறு பார்வயாலான குறுஞ்செய்தி
காணும் ஏக்கத்தை அதிகரிக்கின்றாய் . . .

Monday, September 6, 2010

நாணம்


வெட்கத்திற்கு விடுமுறையளிக்க
போராடுகிறாய் நீ - பாவம்
நீ அறிய வாய்ப்பில்லை
இந்த நாணம் நீ செய்யும்
சேட்டைகளை தான் என்பதை

நாணம்

வெட்கத்திற்கு விடுமுறையளிக்க
போராடுகிறாய் நீ - பாவம்
நீ அறிய வாய்ப்பில்லை
இந்த நாணம் நீ செய்யும்
சேட்டைகளை தான் என்பதை

Friday, September 3, 2010

நீ வேண்டும்


இதயத்தின் நான்கு அறைகள்
போதவில்லையடா
உன் நினைவுகளை சேமித்து வைக்கவும்
உன் மீதான அன்பை தேக்கி வைக்கவும்
விரைவில் என்னை வந்து
சேர்ந்துவிடு இல்லையேல்-நாளுக்கு நாள்
அதிகரிக்கும் உன் மீதான
காதல் நிரம்பிய என் இதயம்
நீ வரும் போது வெடித்து - உன்
காலடி மண்ணாக இருந்தாலும் ஆச்சரியமில்லை

Wednesday, July 7, 2010

என்றும் என் அருகில்


நீ என்னை விட்டு மிகத் தொலைவில் இருக்கின்றாயாம் - இல்லையே
அன்று எனக்கு காய்ச்சல்
உன் மடியில் தலை சாய்த்திருக்கும் போது
நீ தானே இப்ப எப்படி மா இருக்கு என்று
என் தலை கோதினாய்.........................

Monday, June 28, 2010

நாம்


வார்த்தைகளை கொன்று மௌனத்தால்
நாம் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள் யாவும்
அர்த்தமறிய ஹைக்கூக்கள் . . . .

Sunday, May 30, 2010

என் கவிதை


என் இதயத்திற்கு தவிர
யாருக்கும் தெரியாதே உன்னை பற்றி
எப்படி தெரிந்தது என் கைகளிற்கு
எப்பொழுதும் உன் பெயரையே கிறுக்கிக் கொண்டிருக்கின்றன

என்னுள் ........


தலையணையில் முகம் புதைத்து
இளமையின் வலிகளை உணர்கின்ற
ஒவ்வொரு பொழுதும்
இனிமையான ரணங்கள் .
விழிகளை நிரப்பிய கண்ணீர் சேர
இடமின்றி தலையணையில் சங்கமிக்கின்றன

நிழல்


உனக்காகவே உன் நிழலாய் தொடர்ந்த
பாதையில் இன்று நான் நடக்கும் போது
ஏன் தனியே வருகிறாய் என
வினவுகின்றன
உன் பாத சுவடு பட்ட கற்கள்

Monday, May 17, 2010

கனவு.....................


எனை அறியாமல் உன்னை பார்த்துகொண்டிருந்தேன்
தெரிந்தே காதல் எனும் சிறையில் அடைப்பட்டேன் -அன்று
உன் பார்வையில் நான் கண்ட கனவுகளை
காற்றில் எழுதிவைத்தேன் -இன்று
அவை தான் எனக்கு சுவாசமாகி
என்னை வாழ வைக்கின்றன

கனவு.....................

எனை அறியாமல் உன்னை பார்த்துகொண்டிருந்தேன்
தெரிந்தே காதல் எனும் சிறையில் அடைப்பட்டேன் -அன்று
உன் பார்வையில் நான் கண்ட கனவுகளை
காற்றில் எழுதிவைத்தேன் -இன்று
அவை தான் எனக்கு சுவாசமாகி
என்னை வாழ வைக்கின்றன

என் கனவுப் பெட்டகம்


நிலவின் தாலாட்டுடன் மென்தென்றல் தலைகோதும் -இரவில்
கனவின் மடியில் தவழ முயற்சிக்கும் போது
ஆர்ப்பரிக்கும் உன் நினைவலைகள் மறந்துவிட முயற்சித்தாலும்
இமைகள் அடியில் முகாமிட்டு -மறைய
மறுக்கும் நொடிகள் என் கனவுப் பெட்டகத்தை
நிரப்பி கொண்டே இருக்கின்றன ..........................

Thursday, April 29, 2010

எண்ணங்கள்

வெள்ளைக் காகிதமாய் வந்தது நிலவு
மனமும் மயங்குகிறது உன் நினைவுகளை எண்ணி
ஏங்கும் எண்ணங்களுக்கு கனவும் போதவில்லையடா
யார் செய்த வஞ்சனை இது
இயற்கையின் கோலங்களில் இதுவும் ஒன்று
காலையில் எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...

எண்ணங்கள்

வெள்ளைக் காகிதமாய் வந்தது நிலவு
மனமும் மயங்குகிறது உன் நினைவுகளை எண்ணி
ஏங்கும் எண்ணங்களுக்கு கனவும் போதவில்லையடா
யார் செய்த வஞ்சனை இது
இயற்கையின் கோலங்களில் இதுவும் ஒன்று
காலையில் எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...

Sunday, April 11, 2010

நிலவே


எனக்காக தூது செல்லத்தானே உன்னை நாடினேன் -நிலவே
உனக்குள் ஏன் இத்தனை வஞ்சனை
உன்னை நான் நிலவை கண்டதை விட
அவன் வதனமாய் கண்டது தான் அதிகம்
உன்னில் அவனை கட்டுகிறாய் -ஆனால்
தூது செல்ல மட்டும் மறுக்கிறாய்
என் மனம் அவனுக்கு தான் புரியவில்லை
தினம் தினம் என்னைப்போல் தேய்ந்து வளரும் உனக்குமா
தெரியவில்லை

வழிமொழிவேன்.........


நெஞ்சுக்குள் இன்பம் துன்பம்
இரண்டும் சலனங்களை ஏற்படுத்தும் -ஆனால்
எனக்குள் நிகழ்ந்த ஒரு இனிமையான சலனம்
உன் முதல் பார்வை ...........
என்னால் தான் சொல்ல முடியவில்லை
நீயாவது சொல்வாய் என காத்திருக்கிறேன்
முன்மொழிய தான் முடியவில்லை
வழிமொளியவவது முயற்சிப்பேன் இல்லையா..

Saturday, April 10, 2010

பரீட்சை


இரவிரவாய் கற்ற கண்கள்
நீரில் மூழ்கிய கால்கள்
ஏணி வைத்தாலும் எட்டாத
பாடத்திட்டம்
ஒவ்வொரு பாடத்திலும் ஓராயிரம்
கேள்விகள்
நாளை படிக்கலாம் என ஒதுக்கியவை -இன்று
நீ என்ன படிக்க போகிறாய் என கேள்விகளை எழுப்புகின்றன
இத்தனை தடுமாற்றங்களையும் தாண்டி
பரீட்சை மண்டபத்தினுள்
நுழையும் போது
கைகள் தட்டி பார்க்கும் பக்கங்கள்
அத்தனையும் கூறும் ஒரே பதில் -இப்பொழுது
படித்து ஒன்றும் புரியப்போவதில்லை...................... !

பரீட்சை

இரவிரவாய் கற்ற கண்கள்
நீரில் மூழ்கிய கால்கள்
ஏணி வைத்தாலும் எட்டாத
பாடத்திட்டம்
ஒவ்வொரு பாடத்திலும் ஓராயிரம்
கேள்விகள்
நாளை படிக்கலாம் என ஒதுக்கியவை -இன்று
நீ என்ன படிக்க போகிறாய் என கேள்விகளை எழுப்புகின்றன
இத்தனை தடுமாற்றங்களையும் தாண்டி
பரீட்சை மண்டபத்தினுள்
நுழையும் போது
கைகள் தட்டி பார்க்கும் பக்கங்கள்
அத்தனையும் கூறும் ஒரே பதில் -இப்பொழுது
படித்து ஒன்றும் புரியப்போவதில்லை...................... !

உன்னாலே


ஏனோ என் கடிகாரம் -என்
பேச்சை கேட்க மறுக்கிறது
உன்னை காணும் ஒரு நாள் இருப்பின்
அந்நாளை நோக்கி நக தவிக்கிறது.......

தூக்கத்தை தூக்கில் இட்ட பின் தான்
உன்னை கண்டீர்களா என
என் விழிகளை வினவினேன்
பாவம் அவையே அறிமுறையே இல்லாது -நீ
எப்படி என்னுள் நுழைந்தாய்
என்ற குழப்பத்தில் தவிக்கின்றன.........

சிறை


உன்னை பார்க்கும் -கடைக்கண்
பார்வை சிலநேரம் உன் விழி
பார்த்ததும் ஏனோ என்னிடம்
திரும்ப மறுக்கிறது இப்படியே - நீ
என்னை உன்னையறியாமல் அணு
அணுவாய் சிறைப்பிடிக்கின்றாய் -என்
உயிரே ...................!!

எனக்குள் இருந்த என்னை உணர்த்திய வரிகள்


* நிலவொளியில் தனிமையில் இருக்கிறேன்
எதையோ இழந்தவள் போல் தவிக்கிறேன் காற்று தீண்டும் போது
தான் உணர்கிறேன் இழந்தது என் மனதை என்று................

*தாயை கண்டு உணர்கிறேன் தாய்மையை
உன்னை கண்டு உணர்ந்தேன் என் பெண்மையை .............

*காற்றே அவசரம் இல்லை என்னவனை
வேதனைப்படுத்தாது சுவாசமாக மாறிச் செல்
செல்லும் வழியில் அவன் மனதில் நான் இருக்கிறேனா
பார்த்து வந்து சொல்...................

*வாழ்வு உனக்கு சொந்தம் என சுதந்திர எண்ணம் சொல்ல
கண்மூடும் நொடிகூட எனக்கு சொந்தமற்றதாகிவிட்டது - ஏனோ
என் உயிரின் உயில் உன்னிடத்தில் என்பதாலோ .................

அம்மாவுக்கு................

இன்றுவரை நான் ரசிக்கும் அம்மா எனும் கவிதைக்காக என்னால் முடிந்த ஒரு முயற்சி அம்மா உன்னை ராசிக்கா நொடியில்லை எத்தனை அமாவாசைகள் அம்மா உன் பௌர்ணமி முகம் காண கருவறையில் காத்திருந்தேன் வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா நீ எனக்காக அற்பணித்தவற்றை........ மழலையில் தாயாய் பிள்ளைப் பருவத்தில் குருவாய் கட்டிளமையில் தோழியாய் இன்றுவரை எனக்காக நீ எடுத்த அவதாரங்கள் எத்தனை எத்தனை ............... நான் கொண்ட செல்லக் கோபங்களின் போது நீ சிரித்து என்னை ஆற்றும் அந்த நொடிக்காக காத்திருந்த நிமிடங்கள் பல கோடி .... போட்டியில் பரிசிழந்து கண்ணீருடன் உன்னை காண ஓடி வரும் போது நீ கட்டும் பரிவிற்கு ஈடு எது அம்மா வேறு பரிசு.... கரு சுமந்து குழந்தை தவமிருந்த உன்னை என்றும் சுமந்து வாழும் அம்மா என் இதயக் கருவறை