
நாம் வித்தியசமானவர்கள் தான்
இரவின் துணையில் கைக்கோர்த்து
நடப்பதில்லை
நொடிக்கொரு தடவை ஸ்பரிசங்களால்
செத்துப் பிழைப்பதில்லை
கடலோர மண்ணில் இருவர் தடமும் ஒரு சேர
நடப்பதில்லை
உனக்கு முன் நானும் எனக்கு முன் நீயுமாக
ஊட்டிக்கொண்டு சாப்பிடுவதுமில்லை
உன்னை சீண்டும் கரங்கள் இன்று
கனவில் மட்டுமே எனக்கு சொந்தம்
கண்டங்களால் மலைகளால் கடலால்
நாம் பிரிக்கப்பட்டிருக்கலாம்
எனக்குள் உன் காதலும் உனக்குள் என் காதலும்
இந்தப் பிரிவை ஏற்றுக்கொள்வதாயில்லை
நினைவுகளாலும் தூய்மையான அன்பாலும்
வாழ்ந்துகொண்டிருக்கும் நம் காதலால்
நாம் வித்தியாசமானவர்கள் தான்
கவிதை நன்றாக உள்ளது...
ReplyDeleteஉங்கள் தளத்தின் பின்புற அமைப்பை சற்று மாற்றி வைத்தால் நலமாக இருக்கும் என்பது என் எண்ணம்...
தொடரட்டும் உங்கள் சேவை..!
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு இந்து.
ReplyDeleteபத்தி பத்தியாக எழ்தாமல் கவிதைபோல் வெட்டி எழுதுங்கள்... இன்னும் நல்லா இருக்கும்.
வாழ்த்துக்கள்.
தமிழ்மணம், இண்ட்லி போன்ற திரட்டிகளில் இணையுங்கள். அதிக வாசிப்பாளர்களைப் பெறலாம்.
ReplyDeleteமோகன்
ReplyDeleteமிக்க நன்றிங்க உங்க பாராட்டுக்கு
மாற்றி அமைக்க முயசிக்குறேன் :)
குமார்
ReplyDeleteநன்றி இனி அப்படியே எழுதுறேனுங்க தோழரே
உங்கள் அறிவுரைக்கும் வருகைக்கும் மிக்க மிகக் நன்றி
எப்பவுமே நீங்க உங்க கருத்துரைகளை போடுறது உதவியா இருக்கு :)
மிக நன்றாக உள்ளது!
ReplyDeleteநன்றாக உள்ளது. உங்க டெம்ப்ளேட் ரொம்ப அகல கம்மியா இருக்கு. வர ஒரு டெம்ப்ளேட் போடுங்கள். திரட்டிகளில் இணையுங்கள் வாழ்த்துக்கள் .
ReplyDeleteremove word verification and keep moderation
கவிதை நன்றாக உள்ளது. தொடருங்கள்!
ReplyDelete@ LK நன்றிங்க தவறுகளை திருத்துகிறேன்
ReplyDelete@ தேவன் மிக்க நன்றிங்க