உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, May 30, 2010

என் கவிதை


என் இதயத்திற்கு தவிர
யாருக்கும் தெரியாதே உன்னை பற்றி
எப்படி தெரிந்தது என் கைகளிற்கு
எப்பொழுதும் உன் பெயரையே கிறுக்கிக் கொண்டிருக்கின்றன

என்னுள் ........


தலையணையில் முகம் புதைத்து
இளமையின் வலிகளை உணர்கின்ற
ஒவ்வொரு பொழுதும்
இனிமையான ரணங்கள் .
விழிகளை நிரப்பிய கண்ணீர் சேர
இடமின்றி தலையணையில் சங்கமிக்கின்றன

நிழல்


உனக்காகவே உன் நிழலாய் தொடர்ந்த
பாதையில் இன்று நான் நடக்கும் போது
ஏன் தனியே வருகிறாய் என
வினவுகின்றன
உன் பாத சுவடு பட்ட கற்கள்

Monday, May 17, 2010

கனவு.....................


எனை அறியாமல் உன்னை பார்த்துகொண்டிருந்தேன்
தெரிந்தே காதல் எனும் சிறையில் அடைப்பட்டேன் -அன்று
உன் பார்வையில் நான் கண்ட கனவுகளை
காற்றில் எழுதிவைத்தேன் -இன்று
அவை தான் எனக்கு சுவாசமாகி
என்னை வாழ வைக்கின்றன

கனவு.....................

எனை அறியாமல் உன்னை பார்த்துகொண்டிருந்தேன்
தெரிந்தே காதல் எனும் சிறையில் அடைப்பட்டேன் -அன்று
உன் பார்வையில் நான் கண்ட கனவுகளை
காற்றில் எழுதிவைத்தேன் -இன்று
அவை தான் எனக்கு சுவாசமாகி
என்னை வாழ வைக்கின்றன

என் கனவுப் பெட்டகம்


நிலவின் தாலாட்டுடன் மென்தென்றல் தலைகோதும் -இரவில்
கனவின் மடியில் தவழ முயற்சிக்கும் போது
ஆர்ப்பரிக்கும் உன் நினைவலைகள் மறந்துவிட முயற்சித்தாலும்
இமைகள் அடியில் முகாமிட்டு -மறைய
மறுக்கும் நொடிகள் என் கனவுப் பெட்டகத்தை
நிரப்பி கொண்டே இருக்கின்றன ..........................