உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Tuesday, October 19, 2010

வஞ்சனை


நாள் தோறும் உன்னை வலம் வர
என் விழிகளுக்கு மட்டுமே முடிகிறது
அந்த முயற்சியில் என்றுமே
என் கால்களுக்கு தோல்வி தான்
நீ அருகிலிருக்கும் வரை உன்னை
காண வஞ்சித்த அதே கண்கள்
இன்று வள்ளலாய் மாறியது
பார்வையால் அல்ல கண்ணீரால்
சில நாட்களில் அது கூட இல்லாது
ஏழையாய் மாறிவிடும் ....
சாலை ஓரம் நான் காணாது மறைந்து போன
உன் நிழலுக்காய்
இன்றும் அங்கேயே தேங்கி நிற்கும்
இந்த உயிரை மன்னிப்பாயா ......

குழப்பம்


அருகில் வந்த இறப்பும் வழியின்றி
நிற்பது கண்டேன்
இன்னுமா புரியவில்லை உனக்கு
என்னுயிர் எங்கேயடா இங்கிருக்கிறது
அது தன எப்போதோ அங்கு
பறந்து வந்துவிட்டதே

Tuesday, October 12, 2010

காதல்


அது இது என அக்றிணையிலேயே பேசிப்பழகிவிட்டோம்
காதலைப்பற்றி
ஏன் இதுவரை உணரவில்லை இதயங்களின் இணைப்பால்
உருவாகும் காதலுக்கும் உயிர் இருக்கின்றது
என்பதை ....
அனைத்தறிவு ஜீவன்களுக்கும் சொந்தமான
காதலுக்கு எத்தனை அறிவிருக்கின்றதோ யாரறிவார்
காதல்
என்னைப்பொறுத்தவரை என்றும்
உயர்தினைக்குரியது தான் ....

வேகத்தடை


நீ அருகில் இல்லா காலங்களில்
இதயத்துள் இருக்கும் உன் நினைவுகளின் துடிப்பால்
என் அத்தனை பயணங்களிலும் நொடிக்கொரு
வேகத்தடை ,
விரைவில் வந்துவிடு துடிப்பின் வேகம்
நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது ...

தெரிந்துவிட்டது


பூமிக்கு வர நினைத்த மழைத்துளிகள்
நீ வரும் வரை நான் அவற்றை எண்ணிக்கொண்டிருப்பதை அறிந்து
வானத்து விண்மீன்களாய் அங்கேயே தங்கிவிட்டன
உன்னை மீண்டும் காணப் போகும் நொடிகள்
வெகு தொலைவில் இருப்பது அவற்றிற்கும்
தெரிந்துவிட்டது போலும் ...

Friday, October 1, 2010

மழை துளிகள்


பேரூந்து பயணத்தில் பல மணித்துளிகள் கரைவது கூட தெரியாமல்

சில மழைத்துளிகளில் கரைந்துவிட்டது என் ஆழ்மனம்

யன்னல் ஓரக் கம்பிகளில் மோதிக்கொண்டாலும்

வரிசை மாறாது பயணிக்கும் துளிகளுக்கு

யார் கற்று தந்தது ஒழுக்கத்தை ...மூடிய யன்னலில் படிந்த பனியை

மெதுவாக துடைத்து சிறு ஓரப் பார்வையால்

ரசிக்க என்ன இல்லை நம்மைச் சுற்றி ....சின்னஞ் சிட்டுக்கள் மழை அங்கியையும் மீறி

எப்படியாவது நனைந்துவிட வேண்டும் என்று துள்ளித் திரிய

தம்மை பாதுகாத்துகொள்ளும் முயற்சியில் தோல்வி கண்ட

பெரியோர் எப்படியாவது சென்றுவிடவேண்டும் எனும்

எண்ணத்தில் தொடர்கின்றனர்...இன்று தானோ விளையாட்டு போட்டி என எண்ணுமளவு

வெளியே பல சாகசங்கள் இரசனையின் உச்சியில்

தேங்கி நிற்கும் நீரை கடக்க சிலர் தூரம் பாய்தலில்

இன்னும் சிலர் உயரம் பாய்தலில்

எஞ்சிய பலர் நனையாத இடம் தேடி மரதன் ஓட்டத்தில்

தமக்குள்ளேயே வெற்றி கண்டுகொள்கின்றனர்...வெய்யிலில் நிழல் தரும் மரங்கள் இன்று தாமும்

மழை கண்ட சந்தோஷத்தில் ஆட்டம் காண்கின்றன

அகங்காரமாய் நிமிர்ந்து நின்ற புற்கள்

மழைத்துளி காரணமாக தலைக்கணம் கூடிப்போய்

தரைநோக்கி கவிழ்கின்றன ....ரசனைக்கு எல்லை இல்லை

பயணத்தின் முடிவு வரை - ஆகயத்திலிருந்தான

ரகசியத் தூதர்களின் வரவிற்கும் முடிவில்லை ...