உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Tuesday, October 19, 2010

வஞ்சனை


நாள் தோறும் உன்னை வலம் வர
என் விழிகளுக்கு மட்டுமே முடிகிறது
அந்த முயற்சியில் என்றுமே
என் கால்களுக்கு தோல்வி தான்
நீ அருகிலிருக்கும் வரை உன்னை
காண வஞ்சித்த அதே கண்கள்
இன்று வள்ளலாய் மாறியது
பார்வையால் அல்ல கண்ணீரால்
சில நாட்களில் அது கூட இல்லாது
ஏழையாய் மாறிவிடும் ....
சாலை ஓரம் நான் காணாது மறைந்து போன
உன் நிழலுக்காய்
இன்றும் அங்கேயே தேங்கி நிற்கும்
இந்த உயிரை மன்னிப்பாயா ......

5 comments:

 1. அடடா என்ன இது சோகம்....?! நல்லா எழுதுறீங்க தோழி....எனக்கு கவிதை பிடிக்கும் என்பதால் இனி தவறாமல் ஆஜர் ஆகிவிடுவேன்.....!!

  :)

  ReplyDelete
 2. Nalla irukku...

  sogamaka irunthalum thullal varigal.

  ReplyDelete
 3. இன்றும் அங்கேயே தேங்கி நிற்கும்
  இந்த உயிரை மன்னிப்பாயா ....////

  நல்லா இருக்கு அப்படியே பாட்டு பாடுங்கள்

  ReplyDelete
 4. @ kousalya அக்கா உங்கள் வாழ்த்துக்கு நன்றி உங்கள் வரவு மேலும் வலு சேர்க்கும் .....
  இது சோகமில்லை காணா வலி....:)

  ReplyDelete
 5. @ Kumar தோழரே என் அத்தனை பதிப்புகளிலும் உங்கள் கருத்துக்களை பதித்து வாழ்த்துவதற்கு மிக்க நன்றி :)

  @ sounthar படிடுவன் தொண்டைக்குள் வலி அதையும் செய்ய விடுவதில்லை

  ReplyDelete