உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Wednesday, November 14, 2012
காற்றில் இன்று உன் ஈரம் 
சாரல்களாய்...........
விரைவில் உன்னை காண வருகின்றேன் என்று 

எழுதிச் செல்கின்றன..........♥

நீ என்னுடன் தான் இருக்கின்றாய்


யாருக்கும் தெரியாது
நீ என்னுடன் தான் இருக்கின்றாய் என ...
என் தனிமையில் இருளாக,
எனக்காக காத்துக் கிடக்கும் பாதையாக,
அதிகாலை அலாரமாக,
தினம் தேடும் இசையாக,
என்னை வழிநடத்தும் மனசாட்சியாக.
இன்னும் கூட யாருக்கும் தெரியாது 

நீ என்னுடன் தான் இருக்கின்றாய் என... ♥♥♥

Saturday, August 4, 2012

ரசிகன்


தனியாக பயணித்த என் தேடல்களின் மிகுதிக்கு
அர்த்தங்கள் தேடித்தந்தவனே
காதல் என்னும் சொல்லிற்கு நீ தந்த கருத்து
புதிதல்ல நிதர்சனமான இலக்கணம்
வாழ்வை ரசிக்க தெரியாமல் அலைந்த மனம்
இன்று உன்னை ரசிப்பதிற்க்கே நேரமின்றி தவிக்கின்றது
ஒரு வரியில் சொல்லிவிட்டேன்
நீ என்பது வேறில்லை நான் ஆகிவிட்டாய்

Tuesday, July 3, 2012

என் வெற்றி நீ


உன் அத்தனை கனவுகளிலும்

முதலானவளாய் நான் வேண்டும்
உன் நிறைவேறிய நனவுகளில் ஒன்றாய்

என்றும் இவள் வேண்டும்

காத்திருந்த நொடிகளின்

என் வெற்றி நீ

வேண்டாமடா வேறேதும் - என்றும்

என் நினைவுகளில் நிரம்பியவனாய்

நீ மட்டும் இருந்து விட்டால்

Wednesday, June 20, 2012

கனவுக் காதலன்


என் மௌனத்தின் மொழிகளை
புரிந்து கொண்டது உன் இதயம்
என் கண்களின் தேடலை
முடித்துவைத்தன உன் பிரசன்னம்
என் பயணத்தில் முட்களை
மறைத்து எடுத்தன உன் கைகள்
என் கனவுகளின் நிறத்தை
என்னோட ரசித்தன உன் கண்கள்
ஆனால் இவை அறிந்தும்
உன்னை வதைக்கின்றன என் செயல்கள்
இருந்தும் என்னை தாங்கும் உன் உள்ளங்கைகளுக்கு
என்றும் இவள் அடிமை

Sunday, May 20, 2012

பாடல் வரி


விளையாட்டாக ஒரு பாடல் வரி அவனோட இருக்கையில்
என்னையறியாமல் முனகலாக வெளிப்பட்டது ....
"அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா " என்று
அவன் பதில் நான் சற்றும் எதிர்பாராத கவி வரிகளாக
"கண் என்னடி அடிக்கடி சிமிட்டி உன்னை சிலிர்க்க செய்யும் ,
எந்த சத்தமோ ஒலியோ இல்லாத என் இதயத்தில் ஒரு இடம் .... அல்ல
மொத்தமாகவே தந்துவிட்டேனடி நீ உறங்க " என நீ சொல்லி முடிக்க,
வார்த்தைகள் அல்ல சில துளி கண்ணீர் மட்டுமே விழியோரம் அடைக்கலம் வந்தது

Friday, May 18, 2012

நான் அறியாத உண்மை


காதலில் கற்றுக்கொள்ள
ஒன்றுமே இல்லை
நீ இடாத கட்டளைகளை
நிறைவேற்றுபவளாய் நானும்,
நீ எழுப்பாத கேள்விகளுக்கு
பாதிலாய் என் சொற்களும்,
உன் அனைத்து சொந்தமுமாய்
இடைவெளியின்றி நானும்,
உன்னை முழுவதுமாய் புரிந்தவளாய்
இருந்து விட்டால் ....

Sunday, May 13, 2012

முதல் கோபம்
உன் கோபங்களுக்கு
நான் காரணமாய் அமைந்து விடக்
கூடாதென பல தடவை முயற்சித்திருக்கின்றேன்
ஆனால்
யோசிக்க மறந்த ரணங்கள் கற்றுக்கொடுத்தது
உன் கோபங்களுக்கு அல்ல உன் காயங்களுக்கு
நான் காரணமாய் அமைந்து விடக்கூடாது என்று ....
மன்னிப்பாயா என்னவனே .....

Friday, May 4, 2012

ஸ்மைல் :))))))
ஹே ஹே எங்க ஓட பாக்குற ..... நீ எங்க போனாலும் விட மாட்டேன் ... ஏன்னா நான் பூனைகுட்டி இல்ல மனிதக்குட்டி ... ஹா ஹா ஹாஅடடா என்னை facebook ல tag பண்ண சொன்னத எங்க அண்ணா தப்ப புரிஞ்சுகொண்டானே ....
அட யாரு பா அது... படிக்குற மாதிரி நடிக்குற நேரத்துல குழப்புறது .............

Sunday, April 15, 2012

ஆறுதல்

உன் பிரிவின் ரணங்கள் அன்று வலித்த அளவு
இன்று காய படுத்தவில்லையடா ...
காரணம்...
நீயும் பல தடவை கேட்டிருகின்றாய்
நேற்று வரை நானும் அதற்கான பதிலை
தேடிக்கொண்டு தான் இருந்தேன் 
பார்க்காத பல ஆண்டு பிரிவை விட  இன்று
என்னை தொடு தூரத்தில் தான்
உன் ஸ்பரிசங்கள் என்ற நிதர்சனம்
ஆறுதல் இல்லையா ....
என கண்சிமிட்டு சிரித்தேன் நேற்று
உன் குருஞ்ச்செய்திக்காய்
அழைபெசியை தூக்கிய போது....

Wednesday, April 11, 2012

என் தாய்

எனது வலைப்பூவின் இரண்டாவது பிறந்தநாள் பகிர்வு


நிறமற்ற காகிதத்தில் பென்சில் வரைகோடுகளாக மட்டும் இருந்த
என் வாழ்க்கை ஓவியத்திற்கு நிறம் சேர்க்க
நட்பு வழி கை கோர்த்த என் நண்பனே
உன்னை அறியாமலேயே உன்னில் விழுந்தேன் ...
காதல் என்றறியாமலே கனவில் கலந்தேன் ...
உன்னை விட எந்த சொந்தத்திற்க்காகவும் நான் ஏங்கியதில்லை
என் இரண்டாம் தாயே ....

Tuesday, April 3, 2012

தேடல்


உன்னை பற்றி அறிந்த அளவுக்கு
என்னை பற்றி அறியேனடா...
அதனாலேயே தேடிச் செல்கின்றேன் ஆழமாய்,
இன்னும் இன்னும் உன்னை பற்றி மட்டுமே ....

Sunday, April 1, 2012

நீ கேட்ட நான்


காத்திருந்த நொடிகள் பலவாக இருந்தாலும்
எதிர்பார்த்த சொற்கள் வேறாக இருந்த நாட்கள் அவை ...
என் நண்பனாக அறிமுகமில்லாதவனாய்
எனக்குள் அறிமுகம் தந்தாய்...
நேற்று கடந்த நிகழ்வுகளையும் நாளைக்கான
கனவுகளையும் சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினேன் ...
நீயும் அறியாமல் எனை இழுத்துக் கொண்டாய் ...
நட்பெனும் பாதையில் விரல் கோர்த்து கொண்டேன்
முன்னோடியாக நின்று எனை கூட்டிச் செல்வான் என் நண்பன் என்று...
இந்த உறவை நட்பெனும் கட்டத்திலிருந்து
உயிர் உறவாக மாற்ற அடி எடுத்து வைத்த நாள் ...
என்னை காதலியாக கேட்கவில்லை உன் சொற்கள் ...
உன்னை என் துணைவியாக தருவாயா என்று
நீ கேட்ட நொடி புதிதாக இருந்ததடா ....
புரியாத எண்ணங்களோடு தொலைதூர தேசத்திற்கு
உன்னை பயணிக்க அனுப்பி வைத்தேன் ...
கூடவே என் இதயத்தையும் தான் ....

Wednesday, March 14, 2012

என் முதல் குழந்தை


அறியாத சொற்களை தேடி பயணிக்கின்றேன்
உனக்காக கவி வடிக்க
கண்மணி உருட்டலில் ஆயிரம் உணர்வுகளை
உணர்த்திவிடுகின்றாய் சிற் சிற் ஹைக்கூகளாய் ...
நன்றாக பேசத் தெரிந்தவன் டா நீ ...
எவ்வளவு முயற்சித்தாலும் என் அத்தனை
கோபக் கணைகளையும் எளிதில் உன் விழி ஓரச் சிரிப்பில்
பாதி தூரத்திலேயே சிதைத்து விடுகின்றாய் ....
என் முதல் குழந்தையே உன் மழலைத் தனத்திற்கு
நம் குழந்தை கூட போட்டியாகி விட முடியாது ....

Saturday, March 10, 2012

சண்டை......


மீண்டும் உன் வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்து
சண்டைகளில் உன்னை வென்று
நொடிதோறும் உன்னில் கரைய
மணிக்கூட்டு முட்களை சுற்றிக்கொண்டே
காத்திருக்கின்றேன்
மீண்டும் உன்னுடன் சேரும் நாளுக்காக .....

Sunday, January 15, 2012

உயிர் உருவாய் நீ...


கவிதைக்கு இலக்கணம் வகுக்க யாராலும் முடியவில்லை இன்று நான் கண்ட உண்மை கவிதை என்பது யாதெனில் நம் நடைமுறை வாழ்க்கையின் நிதர்சன எழுத்துரு ...
என் வாழ்க்கையின் நிதர்சனம் நீயாக,எழுத்துருவாய் அன்றி உயிர் உருவாய் இன்று என் அருகில் நிற்கின்றாய் ...
உன் அறிமுகம் கிட்டிய இந்த தைத்திருநாள் என்றும் நமக்கான திருநாளாய் அமைய வேண்டும் என்ற ஆசையோடும் காதலோடும் இன்று இந்த பதிவு பகிரப்படுகிறது ...