உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Monday, November 22, 2010

ஆம்நாம் வித்தியசமானவர்கள் தான்
இரவின் துணையில் கைக்கோர்த்து
நடப்பதில்லை
நொடிக்கொரு தடவை ஸ்பரிசங்களால்
செத்துப் பிழைப்பதில்லை
கடலோர மண்ணில் இருவர் தடமும் ஒரு சேர
நடப்பதில்லை
உனக்கு முன் நானும் எனக்கு முன் நீயுமாக
ஊட்டிக்கொண்டு சாப்பிடுவதுமில்லை

உன்னை சீண்டும் கரங்கள் இன்று
கனவில் மட்டுமே எனக்கு சொந்தம்
கண்டங்களால் மலைகளால் கடலால்
நாம் பிரிக்கப்பட்டிருக்கலாம்
எனக்குள் உன் காதலும் உனக்குள் என் காதலும்
இந்தப் பிரிவை ஏற்றுக்கொள்வதாயில்லை
நினைவுகளாலும் தூய்மையான அன்பாலும்
வாழ்ந்துகொண்டிருக்கும் நம் காதலால்
நாம் வித்தியாசமானவர்கள் தான்

Sunday, November 14, 2010

மழைக்காலம்சீண்டிச் செல்லும் உன் பார்வை
மின்னல் கீற்றுக்களாய் - உள்ளுக்குள்
எதிர்பாராமல் இடியென தாக்குதல் நடத்துவதாய்
உன் செல்லக் குறும்புகள்
நான் நனையும் மழைத்துளிகளாய் இடைவெளி இன்றி எனை
ஆள வேண்டுமடா உன் முத்த மழையும்
வெளியில் தான் தேவை காலநிலை மாற்றம்
உள்ளுக்குள் நீ என்றுமே வேண்டுமெனக்கு
மழைக்காலமாய் ............

Thursday, November 4, 2010

தற்கொலை


தினம் தோறும் உனக்குள் தவறி விழுந்து
தற்கொலை செய்வதே வேலையாய்
போய்விட்டது இந்த பாவிக்கு
மீண்டு வர எண்ணமில்லை
பாதி உயிராய் அலைந்து திரியவும் முடிவதில்லை
கொன்று சென்று விடு இல்லையேல்
இவளை முழுமையாய் கொண்டு சென்று விடு

மறக்கக் கற்றுக்கொண்டேன்


மறக்கக் கற்றுக்கொண்டேன் - உன்னையல்ல
உன் பேச்சால் என் மொழியை
உன் அசைவால் என் நிலையை
உன் அன்பால் இவ் உலகை
தினம் தோறும் உன்னால் என்னை
மறக்கக் கற்றுக்கொண்டேன்

ம்ம்ம் .......


என் பொழுதுகள் உன்னோடுதான்
என் இம்சைகளும் உன்னில்தான்
செல்லக் குறும்புகள் நமக்குள்ளேதான்
காதோரச் சினுங்கல்களும் நமக்குள்ளே தான்
காரணம் நம் உலகில் -நாம்
நமக்கே நமக்காகத்தான்