உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Saturday, November 5, 2011


எழுத துடிக்கும் வார்த்தைகளுக்கு
சொற்கள் வலு சேர்க்கவில்லை
இன்று நீயும் என்னை புரிந்து கொண்டதால்
இங்கு வார்த்தை ஏதும் தேவையும் இல்லை ...
இந்த வரிகள்
இது வரை நான் எங்கோ தேடிய நட்பிற்காகவும் ....
இன்று நான் உணர்ந்த என் தோழமைக்காகவும் ....♥♥♥

Tuesday, October 4, 2011

அவன் காதலி


ஒரு வார்த்தையில் என்னை
பற்றி சொல் என்றேன் நான்..
என்னுடையவள் என்றான்
என் கண்களில் முத்தமிட்டபடி

Wednesday, August 31, 2011

*^ காதல் அணுக்கள் ^*


உயிர் அணுக்களை இயந்திர அணுக்களாய்
மாற்றி சில காலம் வரை
நம் காதல் வலையமைப்பிற்கு வலு சேர்ப்போம்
நீயும் நானும் இணையும் நாளில்
அந்த இயந்திர அணுக்களே
நம்மை இயக்கும் அணுக்களாய்
உருப்பெற்று விடும் கண்ணாலனே

Sunday, August 28, 2011

~*நம் கடிகாரம் *~


நாள் தோறும் அதிகரிக்கும் காதலை
சேர்த்து வைக்க இடம் இல்லை
கொட்டித் தீர்க்க நேரமும் இல்லை என
எனக்கு நீயும் உனக்கு நானும் ஆறுதல் சொல்லிக்கொள்ளும்
இந்த தவக் காலம் முடியும் நேரத்திற்காக
நாட்களை வேகமாக நகர்த்தும் முயற்சியில்
இன்றும் நமக்கே வெற்றி ....

Sunday, August 7, 2011

குழந்தை இவள் ....


என் தாயிற்காக சில வரிகள்
என்னை பெற்றவள் அல்ல என்னை தத்து எடுத்த என்னவனுக்காக

காத்திருந்த கருவறை காலத்திற்கான எல்லை
இன்னும் சில நாட்களில் ....

தாயின் கர்ப்பத்தில் குழந்தை போல்
என்னை மனதில் தாங்கிய என்னவனின்
காதல் கருவறையில் பிரசவத்திற்காக
காத்திருக்கும் குழந்தை இவள் ....

Thursday, June 2, 2011

ஆட்சி


காதலியாய் மனைவியாய் உன்னோடு
வாழவே மணிகள் போதவில்லை...
குழந்தையாய் தினம் மாறி
என் தாய்மைக்கும் மொழி தருகிறாய்...
உன் சிணுங்கலும் குறும்பும் யாரைக் கேட்டு
என்னில் தாரை வார்த்தாய் ...
இன்று இங்கு நானில்லை
என்னுள் உருவான உன் ஆட்சி தானடா ....

Monday, May 30, 2011

ரசித்தேன்


நீ என்னுடையவன் என்றான பின் என் கவிதைகளுக்கு
சிறிது சிறிதாய் ஓய்வு கொடுத்துள்ளேன் ....
அறிவாயா கண்ணா உன்னை விட
உனக்கான கவிதைகளை என்னால் ரசிக்க முடிவதில்லை என ......

Monday, April 25, 2011

சும்மா


வலிகளை கொண்டாடும் முயற்சியின் முதல் படி
நாள் தோறும் தொடரும் முடிவில்லா பயணத்திற்கு
இன்றும் ஒரு காற்புள்ளி ,

Friday, March 11, 2011

என்னுள் அவன்


சிறு ஓரப் பார்வை விட்டு சிலிர்ப்பூட்டி
வீழ்த்தி செல்வாய்
தெரியாமல் பார்க்கும் போதும்
மெதுவான சிரிப்பில் அணைப்பாய்

சேட்டைகள் காட்டி செல்லும்
என் பிறக்காத சேயை
அருகிருந்து கொஞ்சி
நான் இரசிக்க வேண்டும்

விரல் இட்டுச் செல்லும் கோலங்கள்
ரங்கோலியாய் அல்ல
புள்ளிக் கோலங்களாய் நீ மட்டும்
அறிந்த அடையாளங்களாக
இவள் உணர்வுகளுடன் சத்தமின்றி மறைகின்றன

Sunday, March 6, 2011

அவன் நிழல்

வெயில் இல்லா காலத்து நிழல் போல
என்றும் இவள் கண்ணெதிரில்
தெரிந்தும் தெரியாமலும்
மறைந்து விளையாடுகிறாய்
என்னடா குறும்பு இது .

உன் நிழலாய் மாறிவிட்ட இவளிடம்
இனி என்ன மறைந்து விளையாட்டு
இமையாத சூரியனின்
துணையோடு வந்துவிடு
மழைக்காலம் உண்டெனில்
வானவில்லை அழைத்துவிடு

Wednesday, February 23, 2011

என் சொந்தம்எனக்கான உறவொன்று என சுயநலமாய்
தேடிக் களைத்த தருணம் ,
நட்பாய் உன் அறிமுகம் மறக்க முடிந்த அல்ல
அத்தனையும் மறக்க மறுத்த வார்த்தைகள்.
தேனாய் அல்ல முட்களாய் குற்றிய சொற்கள்,
சிறிது சிறிதாய் இதயத் திரையை கிழித்தெறிந்தன.

முடிவுக்காக பல காலம் யோசிக்க வைத்த
உன் காதலின் வெளிப்பாடு ,
உன் பிரிவின் வேதனை அறியாமலே
யோசிப்பதாய் கழிந்தது காலம்,

தெரியாமலே உன்னால் கரைந்த இவள் மனம்
ஒரு பொழுதில் எதிர்பாராமல் குறுக்கிட்டது
"நீ அவனை காதலிக்கின்றாய் " என்று

அன்று பிரிவின் வலி அறியாமல்
கழிந்தன நாட்கள்,
இன்று பிரிவின் ரணம் உணர்வதால்
நகர மறுக்கின்றன நொடிகள்.

Saturday, February 12, 2011

காதலர் தினம்
காதலை வெளிப்படுத்தவும்
அவர்தம் காதலரை மகிழ்விக்கவும்
அறியா திசையில் தமக்கான உறவை தேடவும்
தான் காதலர் தினம் என்றால்
தனி ஒரு நாளில் உடன்பாடில்லை
தினம் தோறும் நமக்கான நாள் காத்திருப்பதால்

நண்பர்களுக்கு இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்

Monday, January 31, 2011

உன்னிடம்


தொட்டுச் செல்
காதோரம் உன் மூச்சுக் காற்று விட்டுச் செல்
முத்தங்கள் விட்டுச் செல்
சில வார்த்தைகள் கொட்டிச் செல்
விரல்களால் என்னில் கோலங்கள் தீட்டிச் செல்
வழமை போல் இன்றும் என் கனவில் வந்து செல்
என் செல்லமே ...

Thursday, January 27, 2011

நீ தான் என் பரிசு


விட்டுச் சென்ற வார்த்தைகளால்
நித்தம் நித்தம் இவளை
கொத்திச் செல்லும் வித்தைகள்
எனக்கும் கற்றுத் தருவாயா
உன்னை மீண்டும் மீண்டும்
தீண்டத் துடிக்கும் இவள்
விரல்களை சற்று வந்து செல்ல
வரம் கொடுப்பாயா
உன் காதலில் மூழ்கிவிடும் இவளை
மீண்டு வர விடாமல் செய்யும்
உன் செல்ல சேட்டைகள்
இன்னும் இன்னும் தருவாயா
உன்னிடம் கேட்கும் அத்தனை
வேண்டுகோளுக்கும் பரிசளித்துவிடு
உன் ஸ்பரிசங்களை மீண்டும் பிரியவே
முடியா முடிவிலிக் காலம் வரை

Sunday, January 16, 2011

~ <பகிர்வு> ~நம் பிரிவின் ரணம் தாங்குவேனடா ஆனால் நம் பேச்சுக்குள்ளும் நினைவுக்குள்ளும் வந்து போகும் பிரிவின் தடங்களின் அழுத்தத்தை தாங்க தான் முடிவதில்லை ... நல்ல வேலை இந்த கணனி யுகத்தில் கற்பனைக்கு எட்டாத தொடர்பாடல் முறைகள் வந்தது இல்லையெண்டால் இப்பொழுது இந்த உயிர் உன்னுடன் இருந்திருக்கும் உடலற்ற ஒரு நினைவாக மட்டும் ...
தெரியல டா நீ என்னில் என்ன செய்தாய் என்று ஆனால் ஒன்று தெரியும் நீ இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று ....
ம்ம்ம் வழமை போல நம்மை இணைக்கும் அந்த உயிரில்லா கருவிக்கு முன் நான் நீ வந்ததும் நமக்குள் இந்த கணனி இருப்பதே மறந்துவிடும் அளவிற்கு உன் நெருக்கம் என்னிடத்தில் ...
நம்ம கனவுகளை மட்டும் யாராலையும் புரிஞ்சு கொள்ளவே முடியாது டா காரணம் இவை உறக்கத்தின் வெளிப்பாடா மட்டுமில்லாமல் நாம் வாழத் துடிக்கும் நனவுகளுக்கான பாதையை காட்டிச் செல்வதால் , தினம் தோறும் நீ "நேற்று என்ன கனவு வந்தது"னு கேட்கும் போது சொல்வதர்க்ககவே நித்திரையின் படிகளுக்கு கட்டளையிட்டு தொடர்கின்றேன் ...
இப்படி எனக்குள்ள எல்லாத்தையும் பண்ணிட்டு எப்படி டா ஒன்னும் தெரியாத போலவே இருக்க முடியுது உங்களால ....

Saturday, January 15, 2011

நினைவுப்பகிர்வு


இன்றைக்கு பதிவிடணும்னு தோணுது ஆனா கவிதை இல்லை என்னவனை சந்தித்த நாளின் சந்தோஷப் பகிர்வு ....

அனைவருக்கும் தைத்திருநாள் புத்தாண்டின் வரவேற்பு நிகழ்வு ,எனக்கு என்னவனை என்னுள் வரவேற்ற முதல் நாளின் சந்தோஷ குதுகலிப்பு ..
எங்கிருந்து வந்தயடானு அடிக்கடி கேட்பேன் இதுக்கு பதில் உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ஆனாலும் உன் பதில் என்னை மயங்க வைக்கும் "எல்லாம் நமக்குள்ள இருக்குற வேவ்ஸ் தாண்டி " னு சொல்லி எப்படியோ சீரியஸ் மைண்டையும் வெட்கப்பட வச்சுடுவீங்க ......
என்னவோ யாராலயும் முடியாத ஒரு விஷயம் உன்னால முடியுது என்னதான் நான் சிரிக்க மாட்டேனு அடம் பிடிச்சாலும் எதோ பண்ணி சிரிக்க வச்சுட்டு "நீ சிரிச்ச தானடி நான் சந்தோஷமா இருப்பேன் " னு சொன்ன பிறகும் எப்படி டா நம்ம இடைவேளிய தாங்குவேன் ....
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் உன்னுடன் நான் ரசித்த நொடிகளை ஆனா அத எல்லாம் உங்க கூட கதைகுறபபோ சொல்லுறன் சீக்கிரம் வந்துடுங்க என்ன .........................