உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Thursday, January 27, 2011

நீ தான் என் பரிசு


விட்டுச் சென்ற வார்த்தைகளால்
நித்தம் நித்தம் இவளை
கொத்திச் செல்லும் வித்தைகள்
எனக்கும் கற்றுத் தருவாயா
உன்னை மீண்டும் மீண்டும்
தீண்டத் துடிக்கும் இவள்
விரல்களை சற்று வந்து செல்ல
வரம் கொடுப்பாயா
உன் காதலில் மூழ்கிவிடும் இவளை
மீண்டு வர விடாமல் செய்யும்
உன் செல்ல சேட்டைகள்
இன்னும் இன்னும் தருவாயா
உன்னிடம் கேட்கும் அத்தனை
வேண்டுகோளுக்கும் பரிசளித்துவிடு
உன் ஸ்பரிசங்களை மீண்டும் பிரியவே
முடியா முடிவிலிக் காலம் வரை

9 comments:

 1. ம் நல்லா இருக்கு ....blog red color if u wish can change it will be more good.its request only.

  ReplyDelete
 2. கவிதை அழகா இருக்கு....

  ReplyDelete
 3. @ சிவா நன்றிங்க ... நான் அத மாற்ற முயற்சிகிறேன் :)

  ReplyDelete
 4. @ குமார் ம்ம்ம் நன்றி :)

  ReplyDelete
 5. @ எவனோ ஒருவன் நன்றிங்க தொடர்ந்து வாங்க :)

  ReplyDelete
 6. இந்தக் கவிதை "அருமை " என்று ஒரு வார்த்தையில் ,என் எண்ணங்களின் பதிவுகளை நிறைவு செய்ய எனக்கு விருப்பமில்லை , தோழி ...
  இருப்பினும் "அருமை " என்கிற வார்த்தையும் அவ்வபோது முழுமை பெருகிறது, எனக்கு பிடித்தமானவற்றை செய்து என் பொழுதுகளை விரையம் செய்யும் போது ...!
  இன்று விரையம் அன்றி,உன் தோழமைக்கு விதை விதைத்திருக்கிறேன் ,தோழி
  அருமை உன் வார்த்தைகளும் ,அதில் நீ வடித்திருக்கும் காதலும்

  ReplyDelete
 7. nanban subramanikandan mikka nandri thozhare adikkadi pathivulagirkku varuvathillai athanal than pathil thaamatham :)

  nanban satheeskumar nandri thozhare :P

  ReplyDelete