உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, January 16, 2011

~ <பகிர்வு> ~



நம் பிரிவின் ரணம் தாங்குவேனடா ஆனால் நம் பேச்சுக்குள்ளும் நினைவுக்குள்ளும் வந்து போகும் பிரிவின் தடங்களின் அழுத்தத்தை தாங்க தான் முடிவதில்லை ... நல்ல வேலை இந்த கணனி யுகத்தில் கற்பனைக்கு எட்டாத தொடர்பாடல் முறைகள் வந்தது இல்லையெண்டால் இப்பொழுது இந்த உயிர் உன்னுடன் இருந்திருக்கும் உடலற்ற ஒரு நினைவாக மட்டும் ...
தெரியல டா நீ என்னில் என்ன செய்தாய் என்று ஆனால் ஒன்று தெரியும் நீ இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று ....
ம்ம்ம் வழமை போல நம்மை இணைக்கும் அந்த உயிரில்லா கருவிக்கு முன் நான் நீ வந்ததும் நமக்குள் இந்த கணனி இருப்பதே மறந்துவிடும் அளவிற்கு உன் நெருக்கம் என்னிடத்தில் ...
நம்ம கனவுகளை மட்டும் யாராலையும் புரிஞ்சு கொள்ளவே முடியாது டா காரணம் இவை உறக்கத்தின் வெளிப்பாடா மட்டுமில்லாமல் நாம் வாழத் துடிக்கும் நனவுகளுக்கான பாதையை காட்டிச் செல்வதால் , தினம் தோறும் நீ "நேற்று என்ன கனவு வந்தது"னு கேட்கும் போது சொல்வதர்க்ககவே நித்திரையின் படிகளுக்கு கட்டளையிட்டு தொடர்கின்றேன் ...
இப்படி எனக்குள்ள எல்லாத்தையும் பண்ணிட்டு எப்படி டா ஒன்னும் தெரியாத போலவே இருக்க முடியுது உங்களால ....

8 comments:

  1. //தினம் தோறும் நீ "நேற்று என்ன கனவு வந்தது"னு கேட்கும் போது சொல்வதர்க்ககவே நித்திரையின் படிகளுக்கு கட்டளையிட்டு தொடர்கின்றேன்//

    Nalla Varikal....
    ungal pirivu innum anbai koottum.... kavalai vendam.

    ReplyDelete
  2. இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
    வலையுலகில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. @ சே .குமார் அது ஒன்றே இன்று என் கையில் :)

    ReplyDelete
  4. @ பாரத் பாரதி மிக்க நன்றி தோழரே :)

    ReplyDelete
  5. ////நம்ம கனவுகளை மட்டும் யாராலையும் புரிஞ்சு கொள்ளவே முடியாது டா காரணம் இவை உறக்கத்தின் வெளிப்பாடா மட்டுமில்லாமல் நாம் வாழத் துடிக்கும் நனவுகளுக்கான பாதையை காட்டிச் செல்வதால் , தினம் தோறும் நீ "நேற்று என்ன கனவு வந்தது"னு கேட்கும் போது சொல்வதர்க்ககவே நித்திரையின் படிகளுக்கு கட்டளையிட்டு தொடர்கின்றேன் ...////

    நான் மிகவும் ரசித்த வரிகள்....

    ReplyDelete
  6. @ எவனோ ஒருவன்
    ம்ம்ம் ரொம்ப ரொம்ப நன்றிங்க :)

    ReplyDelete
  7. நீ பிரயோகப்படுத்திய வார்த்தைகள் உயிர் பெற்றது... உலகோடு சேர்ந்து நானும் வாசிக்க வலையில்
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்...
    "கணினி உயிர் இல்லா கருவி தான்.. என்றாலும், பல உயிர்களை ஊசலாடவைக்கும் கருவி என்பதை உனது வார்த்தைகள் புலப்படுத்துகிறது.."
    காதல் கனி ரசம் சொட்டச் சொட்ட காதலிக்கும், உன் கவிதைகள்,கற்பனையின் வெளிப்பாடா அல்ல,உன் உயிரின் உதிரம் ஒவ்வொரு சொட்டும் பருகும் ஒரு மானிடனுக்கு உரியதா ?என்பதனை மட்டும் நான் தெரிந்து கொள்ள ஆவல்கொள்கிறேன்,தோழி

    ReplyDelete
  8. nanban subramanikandanukku ivai aththanayum unmai :)

    ReplyDelete