உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Friday, September 27, 2013

அலைவரிசை

நீ அழைப்பாய் என நானும்
நான்  அழைப்பேன் என நீயும்
காத்திருந்த நொடிகளில்
அழைபேசி இல்லாமல்
நமக்குள் நடந்த போராட்டத்தில்
தோற்றுப்போயின
அனைத்து
அலைவரிசைகளும்...

Sunday, August 18, 2013

என் சேமிப்பு நீ

சேமிப்பில் ஆர்வம் கொண்டவள்
நான் - இன்று
உனக்காக நேரத்தையும்
சேமிக்க கற்றுக்கொண்டென்
நாள்தோறும் குறைவின்றி
உன்னோடு செலவழிக்க ..... !

Tuesday, July 30, 2013

மன்னிப்புஓராயிரம் வலிகளுடன் - என்
தவறுகளை மன்னித்தாய்
வர்த்தையாலேனும் காயப்படுத்தாமல் - உன்னை
தண்டித்து கொண்டாய்  
உன் கோபமான வார்த்தைகளை கொட்டிவிடு கண்ணா
மீண்டும் மீண்டும்
உனக்கு நீயே வலி கொடுத்துகொள்ளாதே 

Saturday, June 15, 2013

என் தோழன்

சொட்டு விட்டு தீர்ந்த கண்ணீர் துளிகள்
உன் விழியில் உயிராய் வாழ தான் இடம் தேடின
இன்று புதிய பாதையில் தேடிச் செல்லும்  பயணத்தில் 
உன் கையில் குழந்தையாய் அல்ல
தோழோடு தோழியாய் மாறிவிட்டதை உணர்த்துகின்றன
 

Thursday, May 16, 2013

ஒருமித்தல்

என் அழகான கனவுகளின் ஆரம்பமாய்
உன் கண் சிமிட்டல்களை கண்டதும்
அவை நடந்தேறிய சுகம் உணர்ந்தேனடா ...
காதலில் இரு மனங்கள் மட்டுமல்ல
கனவுகள் ஒருமித்தலும் அழகுதான் ...

Tuesday, April 2, 2013

அரவணைப்புசெய்யாத தவத்திற்கு
வரமென வந்தவனே
அன்றிருந்து காத்திருந்த - என்
நிமிடங்கள் இன்று
மோட்சம் பெற்றுவிட்டன
உன் தாய்மை நிறைந்த
அரவணைப்பால் ....

Thursday, March 28, 2013

நீ

சுவாசிக்கின்றேன்
மூச்சுக் காற்றாய் நீ
வாசிக்கின்றேன்
எழுத்துக்களாய் நீ
நினைக்கின்றேன்
உணர்வெங்கும் நீ
 - அவன் வரிகள்

Wednesday, March 27, 2013

நிஜம்என் கனவுகளை விட
நனவுகள் அழகாகின
உன்னால் ....

Friday, March 15, 2013

இன்மை

உன் இன்மை உணரும் போது
என் ரசனைகளும் துவண்டுவிடுகின்றன
சொற்களுக்கும் கவிதைக்கும் 
வழி இல்லாமல் ....

Sunday, March 10, 2013

உரிமை

உன் காத்திருப்பின் பயனாய் நான் இருந்தேனோ அறியேன்
ஆனால் என் கனவுகளின் உருவமாய் நீ வந்தாய்..
இன்னும் கூட நெஞ்சம் நம்ப மறுக்குதடா
நீ எனக்கு உன் மீது தந்த உரிமைகளை எண்ணி ..

Friday, February 15, 2013

புன்னகைஉன்  சட்டைப்பைக்குள் அதிர்ந்துச் சிணுங்கும்
என் குறுஞ்செய்திகள்
உன் விழியோரம் ஏற்படுத்தும் புன்னகையை கண்டுள்ளேன்
நீ அனுப்பும் பதில் விம்பங்களில் ....

Thursday, February 14, 2013

பாதை


நான்கு கண்களும் கண்டு  தீர்க்கும்,
கனவுகள்  தொடர்ந்துகொண்டே இருக்கின்றன,
பாதையின்  மேடுபள்ளங்களை  முட்களை  தாண்டி,
உயிர்க்காதல் தரும் சக்தியோடு ....
தேவைகள் என்று பலர் ஆயிரம் தேடி செல்ல,
இனி தேடல்கள் இல்லை நமக்கு தீர்வுகள் மட்டுமே தேவை,
நம் பயணத்தின் பாதையை மெருகேற்றிக்கொள்ள ....

Friday, January 25, 2013

அழகு

பல பேர் கண்களிற்கு
தெரியாத அழகு
உன் மனதிற்கு மட்டும்
தெரிந்தது
மாயம் இல்லை
மந்திரமும் இல்லை
இப்பொழுதெல்லாம் என் அழகு
மெருகேறுகின்றது
நீ விரும்பும் பெண்ணாக .... !