உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Wednesday, February 23, 2011

என் சொந்தம்எனக்கான உறவொன்று என சுயநலமாய்
தேடிக் களைத்த தருணம் ,
நட்பாய் உன் அறிமுகம் மறக்க முடிந்த அல்ல
அத்தனையும் மறக்க மறுத்த வார்த்தைகள்.
தேனாய் அல்ல முட்களாய் குற்றிய சொற்கள்,
சிறிது சிறிதாய் இதயத் திரையை கிழித்தெறிந்தன.

முடிவுக்காக பல காலம் யோசிக்க வைத்த
உன் காதலின் வெளிப்பாடு ,
உன் பிரிவின் வேதனை அறியாமலே
யோசிப்பதாய் கழிந்தது காலம்,

தெரியாமலே உன்னால் கரைந்த இவள் மனம்
ஒரு பொழுதில் எதிர்பாராமல் குறுக்கிட்டது
"நீ அவனை காதலிக்கின்றாய் " என்று

அன்று பிரிவின் வலி அறியாமல்
கழிந்தன நாட்கள்,
இன்று பிரிவின் ரணம் உணர்வதால்
நகர மறுக்கின்றன நொடிகள்.

6 comments:

 1. //எனக்கான உறவொன்று
  என சுயநலமாய்
  தேடிக் களைத்த தருணம்...

  நட்பாய் உன் அறிமுகம்
  மறக்க முடிந்த அல்ல
  அத்தனையும் மறக்க
  மறுத்த வார்த்தைகள்....

  தேனாய் அல்ல...
  முட்களாய் குத்திய சொற்கள்...
  சிறிது சிறிதாய்
  இதயத் திரையை கிழித்தெறிந்தன.//

  கவிதை நல்லாயிருக்கு சகோதரி...
  கொஞ்சம் பாராவாக இல்லாமல் மேலே இருப்பது போல் வரிகளை பிரித்தாளுங்கள்... இன்னும் சிறக்கும்.

  ReplyDelete
 2. தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்

  பாரி தாண்டவமூர்த்தி
  http://blogintamil.blogspot.com/2011/03/4.html

  ReplyDelete
 3. @சகோதரர் குமார் ... மிக்க நன்றி அண்ணா என்றைக்கும் முதல் கருத்தை சொல்லி இன்னும் இன்னும் வலு சேர்ப்பதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 4. @ suppiramanikandan மிக்க நன்றி தோழரே அடிகடி வந்து கருத்துக்களை பகிர்ந்து செல்லனும் ....

  ReplyDelete
 5. @ பாரி அண்ணா உங்கள் உலகத்தில் என் வலைச் சரத்தையும் அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றி .......

  ReplyDelete