உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, November 14, 2010

மழைக்காலம்சீண்டிச் செல்லும் உன் பார்வை
மின்னல் கீற்றுக்களாய் - உள்ளுக்குள்
எதிர்பாராமல் இடியென தாக்குதல் நடத்துவதாய்
உன் செல்லக் குறும்புகள்
நான் நனையும் மழைத்துளிகளாய் இடைவெளி இன்றி எனை
ஆள வேண்டுமடா உன் முத்த மழையும்
வெளியில் தான் தேவை காலநிலை மாற்றம்
உள்ளுக்குள் நீ என்றுமே வேண்டுமெனக்கு
மழைக்காலமாய் ............

5 comments:

 1. சிந்து அவர்களுக்கு கவி தென்றலின்
  வாழ்த்துகள் . உங்களின் மழைகாலம்
  கவிதை வெகு அருமையாய் இருந்தது .
  எளிமையான வரிகள் ,ஆழமான கருத்துகள் .
  நீங்கள் இது போல் நிறைய எழுத என்
  உளமார வாழ்த்துகள் .

  கவி தென்றல் .

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரி...

  இன்றைய வலைச்சரப் பதிவில் தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்...

  நேரமிருப்பின் வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே...

  http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_7.html

  நன்றி...

  வாழ்த்துக்களுடன் சே.குமார்

  ReplyDelete
  Replies
  1. Mikka nandri thozhare ... ungal pathippu innum valu serthathu :)

   Delete