உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Saturday, April 10, 2010

அம்மாவுக்கு................

இன்றுவரை நான் ரசிக்கும் அம்மா எனும் கவிதைக்காக என்னால் முடிந்த ஒரு முயற்சி அம்மா உன்னை ராசிக்கா நொடியில்லை எத்தனை அமாவாசைகள் அம்மா உன் பௌர்ணமி முகம் காண கருவறையில் காத்திருந்தேன் வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா நீ எனக்காக அற்பணித்தவற்றை........ மழலையில் தாயாய் பிள்ளைப் பருவத்தில் குருவாய் கட்டிளமையில் தோழியாய் இன்றுவரை எனக்காக நீ எடுத்த அவதாரங்கள் எத்தனை எத்தனை ............... நான் கொண்ட செல்லக் கோபங்களின் போது நீ சிரித்து என்னை ஆற்றும் அந்த நொடிக்காக காத்திருந்த நிமிடங்கள் பல கோடி .... போட்டியில் பரிசிழந்து கண்ணீருடன் உன்னை காண ஓடி வரும் போது நீ கட்டும் பரிவிற்கு ஈடு எது அம்மா வேறு பரிசு.... கரு சுமந்து குழந்தை தவமிருந்த உன்னை என்றும் சுமந்து வாழும் அம்மா என் இதயக் கருவறை

1 comment:

  1. அம்மாவிற்கான கவிதை மிகவும் அருமையாக.... வாழ்த்துகள்....

    ReplyDelete