உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Saturday, April 10, 2010

எனக்குள் இருந்த என்னை உணர்த்திய வரிகள்


* நிலவொளியில் தனிமையில் இருக்கிறேன்
எதையோ இழந்தவள் போல் தவிக்கிறேன் காற்று தீண்டும் போது
தான் உணர்கிறேன் இழந்தது என் மனதை என்று................

*தாயை கண்டு உணர்கிறேன் தாய்மையை
உன்னை கண்டு உணர்ந்தேன் என் பெண்மையை .............

*காற்றே அவசரம் இல்லை என்னவனை
வேதனைப்படுத்தாது சுவாசமாக மாறிச் செல்
செல்லும் வழியில் அவன் மனதில் நான் இருக்கிறேனா
பார்த்து வந்து சொல்...................

*வாழ்வு உனக்கு சொந்தம் என சுதந்திர எண்ணம் சொல்ல
கண்மூடும் நொடிகூட எனக்கு சொந்தமற்றதாகிவிட்டது - ஏனோ
என் உயிரின் உயில் உன்னிடத்தில் என்பதாலோ .................

1 comment:

  1. காதலின் சின்னம் வலையில் எங்கும்.... உங்களின் அன்பை உலகத்திற்கு காட்டிக்கொண்டு...

    ReplyDelete