
நாம் வித்தியசமானவர்கள் தான்
இரவின் துணையில் கைக்கோர்த்து
நடப்பதில்லை
நொடிக்கொரு தடவை ஸ்பரிசங்களால்
செத்துப் பிழைப்பதில்லை
கடலோர மண்ணில் இருவர் தடமும் ஒரு சேர
நடப்பதில்லை
உனக்கு முன் நானும் எனக்கு முன் நீயுமாக
ஊட்டிக்கொண்டு சாப்பிடுவதுமில்லை
உன்னை சீண்டும் கரங்கள் இன்று
கனவில் மட்டுமே எனக்கு சொந்தம்
கண்டங்களால் மலைகளால் கடலால்
நாம் பிரிக்கப்பட்டிருக்கலாம்
எனக்குள் உன் காதலும் உனக்குள் என் காதலும்
இந்தப் பிரிவை ஏற்றுக்கொள்வதாயில்லை
நினைவுகளாலும் தூய்மையான அன்பாலும்
வாழ்ந்துகொண்டிருக்கும் நம் காதலால்
நாம் வித்தியாசமானவர்கள் தான்