உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Tuesday, September 21, 2010

குறுஞ்செய்தி


தொலைபேசியில் உன் குறுஞ்செய்தி அனுப்பி
எனக்குள் களிப்பை விட
உன் குறு குறு பார்வயாலான குறுஞ்செய்தி
காணும் ஏக்கத்தை அதிகரிக்கின்றாய் . . .

Monday, September 6, 2010

நாணம்


வெட்கத்திற்கு விடுமுறையளிக்க
போராடுகிறாய் நீ - பாவம்
நீ அறிய வாய்ப்பில்லை
இந்த நாணம் நீ செய்யும்
சேட்டைகளை தான் என்பதை

நாணம்

வெட்கத்திற்கு விடுமுறையளிக்க
போராடுகிறாய் நீ - பாவம்
நீ அறிய வாய்ப்பில்லை
இந்த நாணம் நீ செய்யும்
சேட்டைகளை தான் என்பதை

Friday, September 3, 2010

நீ வேண்டும்


இதயத்தின் நான்கு அறைகள்
போதவில்லையடா
உன் நினைவுகளை சேமித்து வைக்கவும்
உன் மீதான அன்பை தேக்கி வைக்கவும்
விரைவில் என்னை வந்து
சேர்ந்துவிடு இல்லையேல்-நாளுக்கு நாள்
அதிகரிக்கும் உன் மீதான
காதல் நிரம்பிய என் இதயம்
நீ வரும் போது வெடித்து - உன்
காலடி மண்ணாக இருந்தாலும் ஆச்சரியமில்லை

Wednesday, July 7, 2010

என்றும் என் அருகில்


நீ என்னை விட்டு மிகத் தொலைவில் இருக்கின்றாயாம் - இல்லையே
அன்று எனக்கு காய்ச்சல்
உன் மடியில் தலை சாய்த்திருக்கும் போது
நீ தானே இப்ப எப்படி மா இருக்கு என்று
என் தலை கோதினாய்.........................

Monday, June 28, 2010

நாம்


வார்த்தைகளை கொன்று மௌனத்தால்
நாம் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள் யாவும்
அர்த்தமறிய ஹைக்கூக்கள் . . . .