
எனக்கான உறவொன்று என சுயநலமாய்
தேடிக் களைத்த தருணம் ,
நட்பாய் உன் அறிமுகம் மறக்க முடிந்த அல்ல
அத்தனையும் மறக்க மறுத்த வார்த்தைகள்.
தேனாய் அல்ல முட்களாய் குற்றிய சொற்கள்,
சிறிது சிறிதாய் இதயத் திரையை கிழித்தெறிந்தன.
முடிவுக்காக பல காலம் யோசிக்க வைத்த
உன் காதலின் வெளிப்பாடு ,
உன் பிரிவின் வேதனை அறியாமலே
யோசிப்பதாய் கழிந்தது காலம்,
தெரியாமலே உன்னால் கரைந்த இவள் மனம்
ஒரு பொழுதில் எதிர்பாராமல் குறுக்கிட்டது
"நீ அவனை காதலிக்கின்றாய் " என்று
அன்று பிரிவின் வலி அறியாமல்
கழிந்தன நாட்கள்,
இன்று பிரிவின் ரணம் உணர்வதால்
நகர மறுக்கின்றன நொடிகள்.