உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Thursday, July 9, 2015

என் காதலே

காலத்தின் வேகத்தோடு ஓடுவது 
அத்தனை சுலபமில்லை ...       
மனமும் செயலும் மாறாமல் 
பயணிப்பதும் எளிதில்லை ....                              
நீ அனைத்திலும் கண்டது 
வெற்றியே .- என் காதலே                         
எம் இருவருக்குள் வந்தது முதல் , 
காலத்தோடு போட்டியிட 
கற்றும் கொடுத்தாய் ,                              
நம் மனம் செயல் மாறாது 
ஒன்றர மேலும் இணையவும் செய்தாய்....                             
நேரம் உனக்கான கவிகளின் அளவை மட்டுமே 
மட்டுப்படுத்தியது , 
உன் மீதான காதலை அல்ல ....                      
இது என்னவனுக்கான என் காதல் கடிதம் .....

Sunday, February 1, 2015

இழக்கும் இனிமைகள்


உண்மை தான்
இழந்துவிட்டேன் - நான் என்னும்
என்னுள் இருக்கும் ரசனைகளை
கவிதைகளை மட்டுமல்ல
சின்ன செல்ல குறும்புகளையும் தான்
சொல் கோர்வைகள் கவியாய் மாற
அனுமதி கேட்டதில்லை ஒருபொழுதும்
கேட்டு வரும் நிலையிலும் இன்று
பேனா மை காகிதத்தை ஸ்பரிசிக்க மறுக்கின்றதே
என்னை அறிந்த தினக்குறிப்பும்
இன்று என்னை நெருங்க அனுமதிப்பதில்லை
நாள் தோறும் தொலைக்கும் கனவுகள்
தடயமே இன்றி மறைகின்றன
மீண்டும் என்னை நெருங்கி விட கூடாதென்று ....


நீ

தவறுகளை திருத்திகொள்ளும் முயற்சியின்
முதல் படி
என்னால் எனக்காக நீ இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றுத்தருவேன்
இதில் நீயும் அடக்கம்

Sunday, April 13, 2014

துளிர்த்தெழுகின்றேனடா

சுக்குநூறாக நொறுங்கி தீரும்

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்

நான் இருக்கின்றேன் என்ற

உன் அணைப்பில் மீண்டும் - மீண்டும்

துளிர்த்தெழுகின்றேனடா

Saturday, April 12, 2014

நேசம்உயிர்  போகும் நேரத்திலும் உன் துணை வேண்டினேன்
இன்று உன் இன்மை உணரும் வலியை கூட -
வெளிப்படுத்தாமல் தவிக்கின்றேன் 

என் சந்தோஷத்தில் முழுமையாய் நீ வேண்டும்
உன் உயர்வில் பகுதியையேனும் நான் வேண்டும்

விலகியிருப்பது வெறுப்பினால் அல்ல
உன்னை இன்னும் இன்னும் அதிகமாய் நேசிப்பதால்

Friday, February 14, 2014

நம் இசை

உனக்குள் வாழும் இசையில்
இனிக்க இனிக்க வாழ்பவள் நான்
நமக்குள் பல பாடல்கள் வரிகள் இல்லாமல் கூட இசைத்திருக்கின்றோம்
ஆனால் தனித்தனியே இசைத்ததில்லையே

நமக்கான இசை
வேறொருவர் அறிய முடியா
நமக்குள் இருக்கும் இசை
நம் காதல் ....
இசை

Friday, September 27, 2013

அலைவரிசை

நீ அழைப்பாய் என நானும்
நான்  அழைப்பேன் என நீயும்
காத்திருந்த நொடிகளில்
அழைபேசி இல்லாமல்
நமக்குள் நடந்த போராட்டத்தில்
தோற்றுப்போயின
அனைத்து
அலைவரிசைகளும்...