உன் காத்திருப்பின் பயனாய் நான் இருந்தேனோ அறியேன் ஆனால் என் கனவுகளின் உருவமாய் நீ வந்தாய்.. இன்னும் கூட நெஞ்சம் நம்ப மறுக்குதடா நீ எனக்கு உன் மீது தந்த உரிமைகளை எண்ணி ..
பல பேர் கண்களிற்கு தெரியாத அழகு உன் மனதிற்கு மட்டும் தெரிந்தது மாயம் இல்லை மந்திரமும் இல்லை இப்பொழுதெல்லாம் என் அழகு மெருகேறுகின்றது நீ விரும்பும் பெண்ணாக .... !