உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, January 15, 2012

உயிர் உருவாய் நீ...


கவிதைக்கு இலக்கணம் வகுக்க யாராலும் முடியவில்லை இன்று நான் கண்ட உண்மை கவிதை என்பது யாதெனில் நம் நடைமுறை வாழ்க்கையின் நிதர்சன எழுத்துரு ...
என் வாழ்க்கையின் நிதர்சனம் நீயாக,எழுத்துருவாய் அன்றி உயிர் உருவாய் இன்று என் அருகில் நிற்கின்றாய் ...
உன் அறிமுகம் கிட்டிய இந்த தைத்திருநாள் என்றும் நமக்கான திருநாளாய் அமைய வேண்டும் என்ற ஆசையோடும் காதலோடும் இன்று இந்த பதிவு பகிரப்படுகிறது ...

Saturday, November 5, 2011


எழுத துடிக்கும் வார்த்தைகளுக்கு
சொற்கள் வலு சேர்க்கவில்லை
இன்று நீயும் என்னை புரிந்து கொண்டதால்
இங்கு வார்த்தை ஏதும் தேவையும் இல்லை ...
இந்த வரிகள்
இது வரை நான் எங்கோ தேடிய நட்பிற்காகவும் ....
இன்று நான் உணர்ந்த என் தோழமைக்காகவும் ....♥♥♥

Tuesday, October 4, 2011

அவன் காதலி


ஒரு வார்த்தையில் என்னை
பற்றி சொல் என்றேன் நான்..
என்னுடையவள் என்றான்
என் கண்களில் முத்தமிட்டபடி

Wednesday, August 31, 2011

*^ காதல் அணுக்கள் ^*


உயிர் அணுக்களை இயந்திர அணுக்களாய்
மாற்றி சில காலம் வரை
நம் காதல் வலையமைப்பிற்கு வலு சேர்ப்போம்
நீயும் நானும் இணையும் நாளில்
அந்த இயந்திர அணுக்களே
நம்மை இயக்கும் அணுக்களாய்
உருப்பெற்று விடும் கண்ணாலனே

Sunday, August 28, 2011

~*நம் கடிகாரம் *~


நாள் தோறும் அதிகரிக்கும் காதலை
சேர்த்து வைக்க இடம் இல்லை
கொட்டித் தீர்க்க நேரமும் இல்லை என
எனக்கு நீயும் உனக்கு நானும் ஆறுதல் சொல்லிக்கொள்ளும்
இந்த தவக் காலம் முடியும் நேரத்திற்காக
நாட்களை வேகமாக நகர்த்தும் முயற்சியில்
இன்றும் நமக்கே வெற்றி ....

Sunday, August 7, 2011

குழந்தை இவள் ....


என் தாயிற்காக சில வரிகள்
என்னை பெற்றவள் அல்ல என்னை தத்து எடுத்த என்னவனுக்காக

காத்திருந்த கருவறை காலத்திற்கான எல்லை
இன்னும் சில நாட்களில் ....

தாயின் கர்ப்பத்தில் குழந்தை போல்
என்னை மனதில் தாங்கிய என்னவனின்
காதல் கருவறையில் பிரசவத்திற்காக
காத்திருக்கும் குழந்தை இவள் ....

Thursday, June 2, 2011

ஆட்சி


காதலியாய் மனைவியாய் உன்னோடு
வாழவே மணிகள் போதவில்லை...
குழந்தையாய் தினம் மாறி
என் தாய்மைக்கும் மொழி தருகிறாய்...
உன் சிணுங்கலும் குறும்பும் யாரைக் கேட்டு
என்னில் தாரை வார்த்தாய் ...
இன்று இங்கு நானில்லை
என்னுள் உருவான உன் ஆட்சி தானடா ....