***நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் ***
உங்கள் கருத்துக்கள்
அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்
வலிகளும் வலிமைகளும்
Saturday, November 5, 2011
எழுத துடிக்கும் வார்த்தைகளுக்கு சொற்கள் வலு சேர்க்கவில்லை இன்று நீயும் என்னை புரிந்து கொண்டதால் இங்கு வார்த்தை ஏதும் தேவையும் இல்லை ... இந்த வரிகள் இது வரை நான் எங்கோ தேடிய நட்பிற்காகவும் .... இன்று நான் உணர்ந்த என் தோழமைக்காகவும் ....♥♥♥
உயிர் அணுக்களை இயந்திர அணுக்களாய்
மாற்றி சில காலம் வரை
நம் காதல் வலையமைப்பிற்கு வலு சேர்ப்போம்
நீயும் நானும் இணையும் நாளில்
அந்த இயந்திர அணுக்களே
நம்மை இயக்கும் அணுக்களாய்
உருப்பெற்று விடும் கண்ணாலனே
நாள் தோறும் அதிகரிக்கும் காதலை
சேர்த்து வைக்க இடம் இல்லை
கொட்டித் தீர்க்க நேரமும் இல்லை என
எனக்கு நீயும் உனக்கு நானும் ஆறுதல் சொல்லிக்கொள்ளும்
இந்த தவக் காலம் முடியும் நேரத்திற்காக
நாட்களை வேகமாக நகர்த்தும் முயற்சியில்
இன்றும் நமக்கே வெற்றி ....
காதலியாய் மனைவியாய் உன்னோடு வாழவே மணிகள் போதவில்லை... குழந்தையாய் தினம் மாறி என் தாய்மைக்கும் மொழி தருகிறாய்... உன் சிணுங்கலும் குறும்பும் யாரைக் கேட்டு என்னில் தாரை வார்த்தாய் ... இன்று இங்கு நானில்லை என்னுள் உருவான உன் ஆட்சி தானடா ....
நீ என்னுடையவன் என்றான பின் என் கவிதைகளுக்கு சிறிது சிறிதாய் ஓய்வு கொடுத்துள்ளேன் .... அறிவாயா கண்ணா உன்னை விட உனக்கான கவிதைகளை என்னால் ரசிக்க முடிவதில்லை என ......