உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Monday, May 30, 2011

ரசித்தேன்


நீ என்னுடையவன் என்றான பின் என் கவிதைகளுக்கு
சிறிது சிறிதாய் ஓய்வு கொடுத்துள்ளேன் ....
அறிவாயா கண்ணா உன்னை விட
உனக்கான கவிதைகளை என்னால் ரசிக்க முடிவதில்லை என ......

Monday, April 25, 2011

சும்மா


வலிகளை கொண்டாடும் முயற்சியின் முதல் படி
நாள் தோறும் தொடரும் முடிவில்லா பயணத்திற்கு
இன்றும் ஒரு காற்புள்ளி ,

Friday, March 11, 2011

என்னுள் அவன்


சிறு ஓரப் பார்வை விட்டு சிலிர்ப்பூட்டி
வீழ்த்தி செல்வாய்
தெரியாமல் பார்க்கும் போதும்
மெதுவான சிரிப்பில் அணைப்பாய்

சேட்டைகள் காட்டி செல்லும்
என் பிறக்காத சேயை
அருகிருந்து கொஞ்சி
நான் இரசிக்க வேண்டும்

விரல் இட்டுச் செல்லும் கோலங்கள்
ரங்கோலியாய் அல்ல
புள்ளிக் கோலங்களாய் நீ மட்டும்
அறிந்த அடையாளங்களாக
இவள் உணர்வுகளுடன் சத்தமின்றி மறைகின்றன

Sunday, March 6, 2011

அவன் நிழல்

வெயில் இல்லா காலத்து நிழல் போல
என்றும் இவள் கண்ணெதிரில்
தெரிந்தும் தெரியாமலும்
மறைந்து விளையாடுகிறாய்
என்னடா குறும்பு இது .

உன் நிழலாய் மாறிவிட்ட இவளிடம்
இனி என்ன மறைந்து விளையாட்டு
இமையாத சூரியனின்
துணையோடு வந்துவிடு
மழைக்காலம் உண்டெனில்
வானவில்லை அழைத்துவிடு

Wednesday, February 23, 2011

என் சொந்தம்







எனக்கான உறவொன்று என சுயநலமாய்
தேடிக் களைத்த தருணம் ,
நட்பாய் உன் அறிமுகம் மறக்க முடிந்த அல்ல
அத்தனையும் மறக்க மறுத்த வார்த்தைகள்.
தேனாய் அல்ல முட்களாய் குற்றிய சொற்கள்,
சிறிது சிறிதாய் இதயத் திரையை கிழித்தெறிந்தன.

முடிவுக்காக பல காலம் யோசிக்க வைத்த
உன் காதலின் வெளிப்பாடு ,
உன் பிரிவின் வேதனை அறியாமலே
யோசிப்பதாய் கழிந்தது காலம்,

தெரியாமலே உன்னால் கரைந்த இவள் மனம்
ஒரு பொழுதில் எதிர்பாராமல் குறுக்கிட்டது
"நீ அவனை காதலிக்கின்றாய் " என்று

அன்று பிரிவின் வலி அறியாமல்
கழிந்தன நாட்கள்,
இன்று பிரிவின் ரணம் உணர்வதால்
நகர மறுக்கின்றன நொடிகள்.

Saturday, February 12, 2011

காதலர் தினம்




காதலை வெளிப்படுத்தவும்
அவர்தம் காதலரை மகிழ்விக்கவும்
அறியா திசையில் தமக்கான உறவை தேடவும்
தான் காதலர் தினம் என்றால்
தனி ஒரு நாளில் உடன்பாடில்லை
தினம் தோறும் நமக்கான நாள் காத்திருப்பதால்

நண்பர்களுக்கு இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்

Monday, January 31, 2011

உன்னிடம்


தொட்டுச் செல்
காதோரம் உன் மூச்சுக் காற்று விட்டுச் செல்
முத்தங்கள் விட்டுச் செல்
சில வார்த்தைகள் கொட்டிச் செல்
விரல்களால் என்னில் கோலங்கள் தீட்டிச் செல்
வழமை போல் இன்றும் என் கனவில் வந்து செல்
என் செல்லமே ...